ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி


ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி
x

ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சியின் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் வெளியிட்டார்.

அதில், 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கஞ்சம் மாவட்டம் ஹிஞ்சிலி தொகுதியில் நவீன் பட்நாயக் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, போலாங்கிர் மாவட்டம் கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

நேற்று வெளியான பட்டியலில் 6 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். கட்சி மாறி வந்த 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 4 எம்.எல்.ஏ.க்களுக்கு 'சீட்' மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.


Next Story