4வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு


4வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:ICC

இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்தியா ஆட உள்ளது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்தியா ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story