ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்


ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
x

image courtesy:twitter/@ACCMedia1

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தோகா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் காசி கோரி 39 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டுகளும், டிரவீன் மேத்யூ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 154 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 148 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மிலன் பிரியநாத் ரத்நாயக்க 40 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சாத் மசூத் மற்றும் சுபியான் முகீன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

1 More update

Next Story