மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அபார பந்து வீச்சு - வங்காளதேசம் 178 ரன்களுக்கு ஆல் அவுட்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தி,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வரும் 8வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச தொடக்க வீராங்கனைகளாக ரூப்யா ஹைதர், ஷார்மின் அக்தர் களமிறங்கினர். ஹைதர் 4 ரன்னிலும், அக்தர் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் சுல்தானா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய சொபானா பொறுப்புடன் ஆடி 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்கள் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரெபயா கான் 27 பந்துகளில் 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை சோபியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாட உள்ளது.






