சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார்.
துபாய்,
Live Updates
- 4 March 2025 3:17 PM IST
இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த‘ஹெட்’ அவுட்
இந்தியாவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
- 4 March 2025 3:14 PM IST
50 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி 7.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்தது.
- 4 March 2025 2:50 PM IST
முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் கூப்பர் கன்னோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
- 4 March 2025 2:14 PM IST
இந்தியா பிளேயிங் லெவன்
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
- 4 March 2025 2:13 PM IST
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்
கூப்பர் கன்னோலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா.
- 4 March 2025 2:07 PM IST
ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு:-
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.
















