சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா


தினத்தந்தி 9 March 2025 1:42 PM IST (Updated: 9 March 2025 10:34 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

துபாய்,






Live Updates

  • 9 March 2025 8:15 PM IST

    அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  • 9 March 2025 7:55 PM IST

    20 ஓவர்கள் முடிவில் இந்தியா 108/2

  • 9 March 2025 7:54 PM IST

    மிச்செல் பிரெஸ்செல் பந்துவீச்சில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

  • 9 March 2025 7:42 PM IST

    ரோகித் - கில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 17 ஓவர்களில் 100 ரன்கள் அடித்தது. 

  • 9 March 2025 7:18 PM IST

    10 ஓவர்கள் முடிவில் இந்தியா 64/0

  • 9 March 2025 7:03 PM IST

    சுப்மன் கில்லின் கேட்சை தவற விட்ட டேரில் மிட்செல்

  • 9 March 2025 6:56 PM IST

    5 ஓவர்கள் முடிவில் இந்தியா 31/0

  • 9 March 2025 6:50 PM IST

    காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக மார்க் சாப்மன் மாற்று பீல்டராக களத்தில் உள்ளார்.

  • 9 March 2025 6:02 PM IST

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

    இவர்களில் வில் யங் நிதானத்தை கடைபிடிக்க ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், வில்லியம்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    மிடில் ஓவர்களில் கிளென் பிலிப்ஸ் - டேரில் மிட்செல் ஒரளவு நன்றாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதனால் சரிவிலிருந்து மீண்ட நியூசிலாந்து நல்ல நிலையை எட்டியது. கிளென் பிலிப்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை கடைபிடித்து வந்த டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் பிரெஸ்வெல் அதிரடியாக விளையாடி அரைசதம் (53 ரன்கள்) அடித்து அணிக்கு வலு சேர்த்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது. 

  • 9 March 2025 5:32 PM IST

    44.4 ஓவர்களில் 200 ரன்களை தொட்ட நியூசிலாந்து

1 More update

Next Story