தன்விர் இஸ்லாம் அபார பந்துவீச்சு... இலங்கையை வீழ்த்திய வங்காளதேசம்


தன்விர் இஸ்லாம் அபார பந்துவீச்சு... இலங்கையை வீழ்த்திய வங்காளதேசம்
x

image courtesy: @ICC

வங்காளதேசம் தரப்பில் தன்விர் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் எமோன் 67 ரன்கள் அடித்தார்.

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் காரணமாக இலங்கை அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 232 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஜனித் லியானகே 78 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தன்விர் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 8ம் தேதி நடக்கிறது.

1 More update

Next Story