பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - வங்காளதேச பயிற்சியாளர்


பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - வங்காளதேச பயிற்சியாளர்
x

கோப்புப்படம்

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.

துபாய்,

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டதற்கான காரணம் குறித்து வங்காளதேச பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஷாகின் மற்றும் நவாஸின் கேட்ச்சுகளை தவறவிட்டபோது, ஆட்டத்தின் போக்கு மாறியது. அதற்கு முன்பு வரை, வங்காளதேசம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

சில கேட்ச்சுகளை அதிகப்படியான லைட் வெளிச்சத்தின் காரணமாக தவறவிட்டார்கள். ஆனால், சில கேட்ச்சுகளை வீரர்கள் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். வங்காளதேச அணியின் தோல்விக்கு காரணம் தவறான முடிவுகளே. அனைவரும் நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என நினைத்தார்கள். ஆனால், எங்களது வீரர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடவில்லை.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை துரத்திப் பிடித்து வெற்றி பெற்றோம். அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. பேட்டர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story