ரோகித் சர்மா எங்கே..? ரசிகரின் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த ரிஷப் பண்ட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி நேற்று புறப்பட்டது.
மும்பை,
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு நேற்றிரவு புறப்பட்டது. இதில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டி லீட்சில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஓய்வுக்குப்பின் இந்திய அணி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் முதல் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து செல்வதற்காக விமான நிலையம் வந்த ரிஷப் பண்டிடம் ரசிகர் ஒருவர், ரோகித் சர்மா எங்கே? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜாலியாக பதிலளித்த பண்ட், "ரோகித் பாய் தோட்டத்தில் ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த தோட்டத்தை நானும் மிஸ் செய்கிறேன்" என்று பதிலளித்தார்.






