பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய விளையாட்டுகள்


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய விளையாட்டுகள்
x

33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி பின்வருமாறு:-

பேட்மிண்டன்:- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி (இந்தியா) -மார்க் லாம்ஸ்பஸ்- மார்வின் சிடெல் (ஜெர்மனி) (ஆண் கள் இரட்டையர் லீக் சுற்று), பகல் 12 மணி.

தனிஷா கிரஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா (இந்தியா) - நமி மேட்சுயமா- சிஹாரு ஷிட்டா (ஜப்பான்) (பெண்கள் இரட்டையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி.

லக்ஷயா சென் (இந்தியா)- ஜூலியன் கராக்கி (பெல்ஜியம்) (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), மாலை 5.30 மணி.

துப்பாக்கி சுடுதல்:- சரப்ஜோத் சிங்- மனு பாக்கர், அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று), பகல் 12.45 மணி.

பிரித்விராஜ் தொண்டைமான் (ஆண்களுக்கான டிராப் பிரிவு தகுதி சுற்று), பகல் 1 மணி.

ரமிதா ஜிண்டால் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி), பகல் 1 மணி.

அர்ஜூன் பாபுதா (ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி), மாலை 3.30 மணி.

ஆக்கி:- இந்தியா- அர்ஜென்டினா (ஆண்கள்) லீக் சுற்று, மாலை 4.15 .

வில்வித்தை:- தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் (ஆண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி), மாலை 5.45 மணி.

டேபிள் டென்னிஸ்:- ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), இரவு 11.30 மணி.


Next Story