விவசாயம் காப்போம்


விவசாயம் காப்போம்
x

நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமை அதாவது வேளாண்மையை குறிக்கிறது.

கடவுளும் இயற்கை தாயும் படைத்த ஓர் அதிசயம் விவசாயம். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். நம் நாட்டில் திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேல் என புற்களும், வயல்வெளிகளும் அழகாக இருந்தது. ஆனால் நாம் புதிது புதிதாக திரும்பும் திசையெல்லாம் கட்டிடம் கட்டி இயற்கையை அழித்துவிட்டோம்.

நமக்கு கை கொடுத்த இயற்கையை அழித்து விட்டோம். நம்முடன் கைகோர்க்க இயற்கை விவசாயமும் தயாராக உள்ளது. ஆனால் நாம் தான் மறுக்கிறோம். நாம் கைக்கொடுப்போமா?

அள்ள அள்ள குறையாத ஓர் பொக்கிஷத்தை இயற்கை அன்னை நம் கையில் கொடுத்துள்ளாள். ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்துவதில்லை. கல்வி கற்றதும் வெளிநாட்டிற்கு சென்று நம் உழைப்பை கொடுப்பதுதான் முன்னேற்றமா? அப்படியானால் நாம் உண்ணும் உணவை விளைவிக்க யார் தான் இருப்பார். நம்மை போன்ற மாணவர்கள் தான் மீண்டும் விவசாயத்தை நம் கரங்களில் எடுக்க வேண்டும்.

பணம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. விவசாய நிலம் வைத்திருப்பவனே உண்மையான பணக்காரன். நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமையை அதாவது வேளாண்மையை குறிக்கிறது. நம் நாட்டின் கொடியை நாம் வணங்குகிறோம். ஆனால் விவசாயத்தையும், விவசாயியையும் நாம் வணங்குவதில்லை. நம் கண்ணிற்கு தெரியாத கடவுளை நாம் வணங்குகிறோம் ஆனால் நம் கண்ணிற்கு தெரியும் விவசாயியை நாம் வணங்குவதில்லை. இது நமது பூமி, நமது நாடு. நாம் தான் இதை பாதுகாக்க வேண்டும். மாசுபடுத்தக்கூடாது.

விவசாயம் காப்போம்! நாட்டை வளப்படுத்துவோம் !


Next Story