சென்னையில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னை,
தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து வளிமண்டலத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது.
இதற்கிடையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாபேட்டை, அண்ணாநகர், கோயம்பேடு, திருவொற்றியூர், தரமணி, வேளச்சேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதைபோல புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நள்ளிரவில் வெளுத்தும் வாங்கிய கனமழையால் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.






