மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகருக்கு 2-வது திருமணம்


மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகருக்கு 2-வது திருமணம்
x
தினத்தந்தி 5 March 2023 3:48 AM GMT (Updated: 2023-03-05T09:23:15+05:30)

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் மனோஜ் மஞ்சு. இவர் முன்னணி தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் ஆவார். மனோஜ் மஞ்சு ஏற்கனவே 2015-ல் பிரணதி ரெட்டி என்பவரை மணந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

பின்னர் மனோஜ் மஞ்சுவுக்கும், ஆந்திர அரசியல்வாதி பூமா ரெட்டியின் மகளான பூமா மவுனிகாவுக்கும் காதல் மலர்ந்தது. பூமா மவுனிகாவும் திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்த நிலையில் மனோஜ் மஞ்சு மற்றும் பூமா மவுனிகா திருமணம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணத்தில் மோகன்பாபுவுக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே திருமணத்துக்கு அவர் செல்லமாட்டார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் திருமணத்தில் மோகன்பாபு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


Next Story