நடிக்க வைப்பதாக பெண் பலாத்காரம்... நடிகர் பாலியல் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு


நடிக்க வைப்பதாக பெண் பலாத்காரம்... நடிகர் பாலியல் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
x

பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தமிழில் தனுசின் சீடன் படத்தில் நடித்து இருந்தார். உன்னிமுகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம் பெண், "ஒரு படத்தில் நடிக்க வைப்பதாகவும், கதையை கேட்க தனது வீட்டுக்கு வருமாறும் உன்னிமுகுந்தன் அழைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்" என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் தனக்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று அந்த பெண் நிர்ப்பந்தம் செய்வதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் உன்னிமுகுந்தன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டு தடை விதித்தது.

மேலும் இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டு விட்டதாக உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் சமரச தீர்வு ஏற்படவில்லை என்றும், உன்னிமுகுந்தன் தொடர்ந்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து விசாரித்த ஐகோர்ட்டு உன்னிமுகுந்தன் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என்றும் அறிவித்தது.

1 More update

Next Story