உடல் எடைக் குறைப்பில் நாம் கவனிக்கத் தவறுபவை..


உடல் எடைக் குறைப்பில் நாம் கவனிக்கத் தவறுபவை..
x
தினத்தந்தி 22 Nov 2021 11:00 AM IST (Updated: 20 Nov 2021 4:39 PM IST)
t-max-icont-min-icon

உடல் எடையை சீராக வைப்பதற்கு, உடல் அமைப்பை மேம்படுத்துவதற்கு, உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலை வலுவாக்குவதற்கு என விதவிதமான வழிமுறைகளில் உடற்பயிற்சிகள் உள்ளன.

டல் எடைக் குறைப்பு என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தான். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் சிறந்த பலனைப் பெறாதபோது, சோர்ந்துபோய் முயற்சியைக் கைவிடுகிறோம். எடைக் குறைப்புக்கான பயணத்தில் நாம் கவனிக்கத் தவறும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து முறையாக செயல்படும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

உடல்வாகு 
ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். மெலிந்த உடல்வாகு, கட்டுக்கோப்பான உடல்வாகு, குண்டான உடல்வாகு என மூன்று வகையான உடல்வாகு இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.   


காரணம்

உடல்நலப் பிரச்சினைகள், வாழ்வியல் மாற்றங்கள், ஹார்மோன் குறைபாடுகள், மரபணு, உணவு முறை, குறைந்த உடல் உழைப்பு மற்றும் மனநலப் பிரச்சினை போன்ற பல காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு உடல் எடை குறையும், சிலருக்கு அதிகரிக்கும். தகுந்த காரணத்தை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ஊட்டச்சத்து
அனைத்து சிகிச்சை முறையிலும் எல்லா சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவையே பெரும்பாலும் பரிந்துரைப்பார்கள். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், தங்களுக்கு எவ்வித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகுந்ததுபோல உணவு அட்டவணையை வடிவமைத்து பின்பற்றுவது சிறந்தது.

உடலமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சி
உடல் எடையை சீராக வைப்பதற்கு, உடல் அமைப்பை மேம்படுத்துவதற்கு, உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு, உடலை வலுவாக்கு
வதற்கு என விதவிதமான வழிமுறைகளில் உடற்பயிற்சிகள் உள்ளன. இதில் உங்கள் உடலமைப்புக்கு ஏற்றபடி பயிற்சிகள் செய்யவேண்டும். உதாரணமாக, மிதமான உடலமைப்புடன் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் அப்டமன் கோர் பயிற்சிகளை செய்யலாம்.

வயது மற்றும் உடலுக்கேற்ற உறக்கம்
சிலருக்கு தூங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தினசரி 8 மணி நேரம் உறக்கம் அவசியம் என்பதைத் தாண்டி, வயதுக்கு ஏற்றவாறு சீரான, நிம்மதியான தூக்கமும் முக்கியமானது. தூக்கமின்மை மற்றும் நேரம் தவறிய தூக்கத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடலில் கொழுப்பு சேர்வது, உடல் எடை அதிகரிப்பது மற்றும் குறைவது போன்றவை ஏற்படலாம்.

மன நலம்  
மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் அதீத சிந்தனை போன்றவற்றாலும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரும். மன நிம்மதி, நடுநிலையான மன நிலை, தெளிவான சிந்தனை போன்றவை உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு உதவும். மன நலம் சீராக இருப்பதற்கு தியானம், யோகா, மூச்சுப் பயற்சி அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களைச் செய்வது போன்றவை கைக்கொடுக்கும். 


Next Story