தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?


தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?
x
தினத்தந்தி 31 Jan 2022 5:30 AM GMT (Updated: 29 Jan 2022 11:57 AM GMT)

எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.

டல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும்.

எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.

எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.

உடற்பயிற்சி என்றவுடன் கடுமையாக உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஏரோபிக்ஸ், ஜும்பா, உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள், ஆரம்ப கட்ட தசைப்பிடிப்பு தளர்வு பயிற்சிகள், இதயத்தை பலமாக்கும் பயிற்சிகள், ஜாக்கிங், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கணிசமான அளவு குறைக்கும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் சேமிக்கப்படும் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இயலும். தவிர, இதயம் சார்ந்த நோய்களும், பிரச்சினைகளும் ஏற்படுவதை தடுக்கும். உடலின் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி வகுக்கும்.

இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். தடைகளற்ற சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும். உடலையும், மனதையும் இளமையாக வைத்திருக்க உதவும்.

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் வேதி மாற்றங்கள் உடல் மற்றும் மனநலனில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் அழுத்தம், சோர்வு நீங்கி புத்துணர்வு பெற செய்யும். சிந்தனைத் திறனை மேம்படுத்தி, எளிதில் சரியான முடிவெடுக்கும் தன்மையை ஊக்குவிக்கும். 

Next Story