இலங்கையில் விஜய்-ன் ‘பீஸ்ட்’ ரிலீஸ்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குவிந்த ரசிகர்கள்
இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ படம் ரிலீசாகி உள்ளது.
கொழும்பு,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய் படமான ‘பீஸ்ட்’ ரிலீசாகி உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், விஜய் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பீஸ்ட் படத்துக்கு அங்கு 850 முதல் 3,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story