ஆசிரமத்தை சுத்தம் செய்ய வாலிபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரமத்தை சுத்தம் செய்ய வாலிபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2017 9:53 PM GMT (Updated: 14 July 2017 9:52 PM GMT)

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வாலிபரை ஆசிரமத்தை சுத்தம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை

சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்வர் (வயது 20). இவர் இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘நானும், என் மீது குற்றம்சாட்டிய இளம்பெண்ணும் எங்களுக்கு இடையேயான பிரச்சினை குறித்து பேசி சமரசம் ஆகிவிட்டோம். எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் ’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு வாலிபரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. எனினும் அந்த வாலிபரை 3 மாதங்களுக்கு ஞாயிறு தோறும் சோலாப்பூரில் உள்ள பத்மாவதி ஆசிரமத்தை சுத்தம் செய்யவும், கிரித்திகர் சட்ட கல்லூரி நூலகத்திற்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.


Next Story