சத்தியமங்கலம் அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் தீவிர விசாரணை
சத்தியமங்கலம் அருகே தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன். அவருடைய மகன் வேலுசாமி (வயது 38). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு சென்ற வேலுசாமி இரவு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் சத்தியில் இருந்து பண்ணாரி செல்லும் மெயின் ரோடு ஓரமாக ஒரு வாலிபர் படுகாயங்களுடன் கிடந்தார்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்துவந்த 108 ஆம்புலன்சு மருத்துவர் வாலிபரை பரிசோதித்தார். அப்போது இறந்துவிட்டது தெரியவந்தது.
இதற்கிடையே சத்தி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்தவர் ராமாபுரத்தை சேர்ந்த வேலுசாமி என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
வேலுசாமி ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது பின்னால் இருந்து வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதா? அல்லது அவருடைய விரோதிகள் பின்தொடர்ந்து வந்து வேலுசாமியை அடித்து கொலை செய்துவிட்டு உடலை ரோட்டு ஓரமாக போட்டுவிட்டு சென்றார்களா? என்று தெரியவில்லை. வேலுசாமியின் 2 கண்ணங்களிலும், தலையிலும் காயங்கள் உள்ளன. இதனால் போலீசாரால் உடனடியாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
இதுகுறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுசாமி விபத்தில் இறந்தாரா? அப்படி என்றால் அவர் மீது மோதிய வாகனம் எது? அல்லது கொலை செய்யப்பட்டாரா? கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story