அட்டாக்பாண்டி ஜாமீன் கேட்டு மனு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும், மு.க. அழகிரிக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும், மு.க. அழகிரிக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக்பாண்டி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது 20–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார். 2015–ம் ஆண்டு மும்பையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தொடர்ந்து 3 முறை தாக்கல் செய்த மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் 4–வது முறையாக அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.