தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணிகளுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை


தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணிகளுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. அதில் 29 வார்டுகளில் மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணி செய்து வருகின்றனர்.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின் சிதரஞ்சன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. அதில் 29 வார்டுகளில் மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணி செய்து வருகின்றனர். மீதம் உள்ள 31 வார்டுகளில் 3 வருடங்களுக்கு துப்புரவு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. குப்பைகளை சேகரிக்க மட்டும் ரூ.11 கோடியே 6 லட்சத்திற்கு தற்போதைய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்த ஒப்பந்தப்பணியை செய்து வரும் நிறுவனங்கள் இதைவிட குறைந்த கட்டணத்திலேயே செய்து வருகின்றன. தற்போது தூத்துக்குடி மாநகராட்சி கமி‌ஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒப்பந்தப்பணிகள் எந்தெந்த வார்டுகளுக்கானது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. மொத்தமாக 600 பணியாளர்கள் என்ற தகவல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணிகளுக்கான டெண்டருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணிகளுக்காக விடப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி கமி‌ஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story