முதல்அமைச்சர், அமைச்சருக்கு முகநூலில் மிரட்டல் விடுத்தவர் கைது - திருப்பூர் போலீசார் நடவடிக்கை
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யும் இடம் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருக்கு முகநூலில் மிரட்டல் விடுத்தவரை திருப்பூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணமடைந்தார். அந்த நேரத்தில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து கோர்ட்டு மூலம் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது. இந்த சமயத்தில் முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பல கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுமட்டுமின்றி, கருணாநிதிக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்துக்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்பது போன்ற கருத்துகளை முன்வைத்து மிரட்டல் வாசகங்களை பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதை பார்த்த அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தென்னம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன்(வயது58) திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், அந்த நபர் பதிவிட்டிருந்த பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த குறிப்பிட்ட முகநூல் முகவரியை வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நபர் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து கனகசுந்தரத்தை பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story