கேரளாவில் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 11 நாட்கள் நடைபெற்ற கூட்டுப் பயிற்சி நிறைவு


கேரளாவில் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 11 நாட்கள் நடைபெற்ற கூட்டுப் பயிற்சி நிறைவு
x

Image Courtesy : @indiannavy twitter

11 நாட்கள் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.

திருவனந்தபுரம்,

இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையிலான 11 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகளும் கடந்த 2005 ஆண்டு முதல் இத்தகையை கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பயிற்சியின் போது கடல்சார் மீட்பு பணிகள் மற்றும் வெடிப்பொருட்களை கையாள்வது, பாதுகாப்பாக அகற்றுவது உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியானது இன்று நிறைவு பெறுகிறது.

மேலும் இந்த பயிற்சியின் போது இயங்குதன்மை மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் இரு நாட்டு கடற்படைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கடற்படையின் செயல்பாட்டு விதிமுறைகளின் மீதான ஆக்கபூர்வமான ஈடுபாடு, கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல், மீட்பு பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் டைவிங் குழுக்களின் திறமைகளை மேம்படுத்தியது தொடர்பாகவும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


Next Story