உக்ரைன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்


உக்ரைன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்
x

‘சிறப்பு திருமணச் சட்டம்’ (பிரிவு 11) மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரது திருமணமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மசாலா,

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலோனா புர்மாகா என்ற பெண், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலில் செகேய் நிவோகோவ் என்ற நபரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலரவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதில் செகேய் நிவோகோவ் ரஷிய நாட்டில் பிறந்து இஸ்ரேல் நாட்டிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த காதல் ஜோடி இருவரும் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற இந்த காதல் ஜோடிக்கு, இந்திய கலாச்சாரம் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கியதால், இந்தியாவிலேயே இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் தர்மசாலா மேஜிஸ்திரேட் அலுவலகத்தில் இவர்களது திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

'சிறப்பு திருமணச் சட்டம்' (பிரிவு 11) மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரது திருமணமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மணமகன் செர்கேய் நிகோவ் கூறுகையில், ரஷியாவும் உக்ரைனும் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்தனர் என்றும் அரசுகளுக்கு இடையே தான் சண்டை நடைபெறுகிறது, மக்களிடையே இல்லை என்றும் கூறினார்.


Next Story