ஆந்திர சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 13 -ந் தேதி தேர்தல்


ஆந்திர சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 13 -ந் தேதி தேர்தல்
x
தினத்தந்தி 16 March 2024 5:41 PM IST (Updated: 16 March 2024 5:49 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆந்திரா மட்டுமின்றி ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு உள்பட 26 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறும் . அன்றைய தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணையின்படி, ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு மே 13 -ந் தேதி தேர்தல் நடைபெறும். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெறும்.

ஒடிசா சட்டப் பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

1 More update

Next Story