'கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 127 இடங்களில் வெற்றி பெறும்' - அமித்ஷா நம்பிக்கை


கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 127 இடங்களில் வெற்றி பெறும் - அமித்ஷா நம்பிக்கை
x

கர்நாடக தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தோதபல்லபுரா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் கலந்து கொண்ட பின்னர், அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "இந்த தேர்தலில் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் அல்லது நிச்சயமாக 127 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம். கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரின் ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.


Next Story