இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன பா.ஜ.க... பதிலளித்த காங்கிரஸ்... 'எக்ஸ்' தளத்தில் சுவாரஸ்யம்!


இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன பா.ஜ.க... பதிலளித்த காங்கிரஸ்... எக்ஸ் தளத்தில் சுவாரஸ்யம்!
x

‘இந்திய அணியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று பா.ஜ.க. பதிவிட்டிருந்தது.

புதுடெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், "இந்திய அணியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், "உண்மைதான்.. இந்தியா நிச்சயம் வெல்லும்" என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



Next Story