வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை...!


வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை...!
x

வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல்காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது.

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ராகுல்காதியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானது.

இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால் காலியாக உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் உள்ளது. நீதித்துறையில் தீர்வுகான (ராகுல்காந்தி மீதான வழங்கு) கீழமை கோர்ட்டு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து. ஆகையால் நாங்கள் காத்திருக்கிறோம்' என்றார்.


Next Story