முதல்-மந்திரி மாமா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள்...! - காலிக்குடங்களுடன் பள்ளி குழந்தைகள் போராட்டம்


முதல்-மந்திரி மாமா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள்...! - காலிக்குடங்களுடன் பள்ளி குழந்தைகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

முதல்-மந்திரி மாமா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள்... என்று காலிக்குடங்களுடன் பள்ளி குழந்தைகள் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று மண்டியா, மத்தூர் தாலுகாக்களில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதுபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பெண்களும் போராட்ட களத்தில் குதித்ததை காண முடிந்தது. மண்டியா அருகே கியாதுங்கதே கிராமத்தில் விவசாயிகள் போராட்டகுழு சார்பில் நேற்று பேரணி நடந்தது. இந்த பேரணியில் விவசாயிகளுடன் பள்ளிக் குழந்தைகள் தலையில் காலிக்குடங்களை சுமந்து கொண்டு வந்தனர். அப்போது பள்ளி குழந்தைகள், "குடிக்க தண்ணீர் இல்லை, வயல்வேலைக்கு தண்ணீர் இல்லை, மாடுகளுக்கு தண்ணீர் இல்லை. முதல்-மந்திரி மாமா... தயவுசெய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள்..." என வேண்டுகோள் விடுத்து கோஷமிட்டனர்.


Next Story