சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு


சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு
x

கோப்புப்படம்

சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்தும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஐகோர்ட்டு தாமாக முன்வந்து சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யும்போது, தனது தரப்பு கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரியுள்ளார்.


Next Story