சீனாவின் அத்துமீறல் "பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்?" -ராகுல்காந்தி கேள்வி


சீனாவின் அத்துமீறல் பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? -ராகுல்காந்தி கேள்வி
x

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ஜங்னான் என பெயரிட்டு சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டின் கூட்டத்தில் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

"2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?" "பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்?"

"அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள 20,000 கோடி ரூபாய் பினாமி பணம் யாருடையது? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்?"

என கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story