கேரளாவில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!


கேரளாவில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
x

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் மெதுவாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும், மேலும் ஒன்பது மாவட்டங்களில் செவ்வாய்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும்.

இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வருகிற 7-ந்தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story