பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி - அதிர்ச்சி தகவல்


பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி - அதிர்ச்சி தகவல்
x

ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய சத்யேந்திர சிவல் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி சத்யேந்திர சிவல் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீரட்டில் சத்யேந்திர சிவலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு ரகசிய தகவல்களை அனுப்பியதை சத்யேந்திர சிவல் ஒப்புக்கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும்போது ரகசிய தகவல்களை பெற்று அதை பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் கூறியுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நிலைகள், பாதுகாப்புத்துறையின் நடவடிக்கைகள், வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை பெற்றுள்ளார். அந்த தகவல்களை இடைத்தரகர்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, தூதரக அதிகாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story