அரசு ஊழியரின் சகோதரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது


அரசு ஊழியரின் சகோதரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது
x

அரசு ஊழியர் திருமணமாகி இறந்துவிட்ட நிலையில் அவரது வேலையை அவருடைய சகோதரிக்கு கருணை அடிப்படையில் வழங்க இயலாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மின்பகிர்மான நிறுவனம் (பெஸ்காம்) ஜூனியர் லைன்மேனாக வேலை பார்த்து வந்த திருமணமான ஒருவர் பணியில் இருந்த சமயத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது சகோதரி, தனது சகோதரரின் பணியை கருணை அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இறந்துபோன அரசு ஊழியரின் வேலையை சகோதரிக்கு கருணை அடிப்படையில் வழங்க முடியாது என்றும், அவரது மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என்று கூறி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமைநீதிபதி பிரசன்னா பி.வரலே அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அதில், கர்நாடக சிவில் சர்வீசஸ் விதிகள் 1996 விதி 2 (1) (பி) படி திருமணமாகி இறந்து விட்ட அரசு ஊழியரின்வேலையை அவரது மனைவி, மகன் அல்லது மகள் ஆகியோருக்கு தான் கருணை அடிப்படையில் வழங்க முடியும். திருமணம் ஆகாதவர், திருமணமாகி விவகாரத்து பெற்றவர் அரசு ஊழியராக பணியாற்றி உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் யாருக்காவது கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


Next Story