மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட்


மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
x

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியின் நெற்றியில் ரத்தம் வழிகிற படங்கள், அக்கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்" என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதனால் இதுபோன்ற அசாம்பாவிதம் ஏற்பட்டது என்பது குறித்து விவரம் ஏதும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி விரைவில் குணமடையவும், சிறந்த உடல் நலம் பெறவும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில் (முன்பு டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story