மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்


மத்திய பிரதேசம்,  ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 4 Oct 2023 10:36 PM IST (Updated: 4 Oct 2023 11:14 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு நாளை (வியாழன்) செல்கிறார்.

இதன்படி ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரெயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி நாளை காலை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களில் ஐஐடி ஜோத்பூர் வளாகமும் அடங்கும். அதேநேரத்தில் நகர விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில், சாலை, ரெயில், எரிவாயு குழாய், வீட்டுவசதி மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற துறைகளில் ரூ.12,600 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மாண்ட்லா, ஜபல்பூர், திண்டோரி, சியோனி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story