ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்: கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோட்டயம் மாவட்டத்தில் அதிகாலை முதல் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் விழுந்ததுடன், வாகனங்களும் சேதமடைந்தன.
இதற்கிடையே, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story