மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - காங்கிரஸ்


மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - காங்கிரஸ்
x

பிரதமராக 3-வது முறையாக மோடி இன்று பதவியேற்க உள்ளார்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 292 இடங்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இன்று பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். எனினும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில், மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள். மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது. அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும்.

செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story