தெலங்கானா: முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவை எதிர்த்து மாநில காங். தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!


தெலங்கானா: முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவை எதிர்த்து மாநில காங். தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
x

தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலங்கானாவில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் கஜ்வெல் ஏற்கனவே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்ற தொகுதி. கமரெட்டி தொகுதி, கே.சந்திரசேகர ராவின் பூர்வீக மாவட்டம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று தெலங்கானா தேர்தலுக்கான 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, கமரெட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேவந்த் ரெட்டி ஏற்கனவே கோடங்கல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story