8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்: அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது - வெளியுறவு துறை


8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்:  அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது - வெளியுறவு துறை
x

இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்

புதுடெல்லி,

வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன.இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.

இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப்பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.


Next Story