பீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு


பீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
x

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

பாட்னா,

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' பாத யாத்திரையை தொடங்கி உள்ளார்.

மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கியது. கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் கடந்த 25ம் தேதி மேற்கு வங்காளத்தை அடைந்தது.

2 நாட்கள் ஓய்வுக்கு பின் கடந்த 28ம் தேதி மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைபயணம் நேற்று முன் தினம் பீகாரை அடைந்தது. இதன்படி ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி மால்டா வழியாக மேற்கு வங்காளத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பீகார்-வங்காள எல்லை அருகே கட்டிஹார் என்ற பகுதியின் கல் வீச்சு என சந்தேகிக்கப்படும் வகையில் ராகுல் காந்தியின் காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "மேற்கு வங்காளம்-பீகார் எல்லை அருகே ராகுல் காந்தி சென்ற காரின் பின்புற கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. யாரோ ஒருவர் கல் வீசியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் இணைந்து முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில் ராகுலின் நடைபயணம் அங்கு நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி பா.ஜனதாவுடன் சேர்ந்ததை ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story