பஞ்சாப்பில் 11 வழக்குகளில் தொடர்பு; மும்பையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது


பஞ்சாப்பில் 11 வழக்குகளில் தொடர்பு; மும்பையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 7:00 PM GMT (Updated: 18 Oct 2023 7:00 PM GMT)

மும்பையில் பதுங்கியிருந்த பஞ்சாப்பில் 11 வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த பஞ்சம் நூர்சிங் (வயது32), ஹிமான்சு மாதா(30). இவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல், துப்பாக்கி சூடு மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுதல் உள்பட 11 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி பஞ்சாப் போலீசார் மும்பை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் மும்பை குர்லா வினோபாவே நகர் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பஞ்சாப் மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story