மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் விஷ சாராயத்தை விற்றதாக கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (வயது 40), பனையூரை சேர்ந்த ராஜேஷ் (35), ஓதியூரை சேர்ந்த வேலு (45), சந்திரன் (40) ஆகியோரை சித்தாமூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மேலும் அவர்களிடமிருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம், வாகனங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
விளம்பூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவர் விஜயகுமார், கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் (35) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.