செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 5 பேர் கைது
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் செங்கல்பட்டு டவுன் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி, அரிவாள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்த ஜனா என்ற ஆகாஷ் (20), சென்னை குடிசை பூதூர் கே.கே. நகர் பகுதியை சேர்ந்த மோனிஷ் (19), பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சரத்குமார் (24), சென்னை கிண்டி அம்பாள் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20), செங்கல்பட்டு வேதாசலநகர் காண்டீபன் தெருவை சேர்ந்த பொற்காலன் (20) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு கையில் கத்திகளுடன் சென்ற போது பிடிபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.