கணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்


கணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்
x

மதுராந்தகம் அருகே கணவர், நண்பருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பூக்கத்துறையை சேர்ந்தவர் சுகுமார் (வயது 27). இவருடைய மனைவி கவிதா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரிலால் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் பூக்கத்துறையில் தங்கி இருந்தார்.

சுகுமாரும், அரிலாலும் நண்பர்களாக பழகி வந்தனர். சுகுமார் தனது மனைவிக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கவிதா தன்னுடைய நண்பரிடம் மது வாங்கி வரச்சொல்லி அதில் விஷம் கலந்து தனது கணவருக்கு கொடுத்தார். அவர் விஷம் கலந்த மதுவை தனது நண்பரான அரிலாலுடன் சேர்ந்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனனின்றி நேற்று இரவு அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்தனர். இறந்த அரிலாலுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story