அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவு; தேர்தலுக்கு முன்பு எல்லாம் மாறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம்,
தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஒன்றாக இணைவார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் எல்லாம் மாறும். அவர்கள் சண்டை போடுவது இது முதல் முறை அல்ல. சண்டை போடுவது போன்று செயல்படுவார்கள், பின்னர் மீண்டும் ஒன்றாக இணைவார்கள்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. தி.மு.க.வை முதலில் மிரட்டிப் பார்த்தார்கள். இருப்பினும் தி.மு.க. இதற்கெல்லாம் அஞ்சாது. ஆனால் அ.தி.மு.க.வின் வரலாறு உங்களுக்கு தெரியும். அவர்கள் நிச்சயம் பயப்படுவார்கள். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் எல்லாம் மாறிவிடும்."
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Related Tags :
Next Story