ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது
திருப்பூரில் ரவுடி கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நல்லூர்
திருப்பூரில் ரவுடி கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரவுடி கொலை
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ஆட்டோ தினேஷ் (வயது 29). பிரபல ரவுடியான இவர் பத்மினி கார்டன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் (28), தினேஷ் (26), தமிழரசன் (25), பாலகிருஷ்ணன் (23), கண்ணன் (25), பாலாஜி சரவணன் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் ெதாடர்புடைய ராஜேஷ் மற்றும் பாண்டியராஜன் உள்பட 5 பேர் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
முதல் குற்றவாளி கைது
இந்த நிலையில் ராஜேஷ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கருமாரம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ராஜேஷ் (36) மற்றும் பாண்டியராஜனை (29) ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர் களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.