முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து: பாஜக நிர்வாகி கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
முதல்-அமைச்சர் குறித்து தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி ஜெய்குமார் மீது திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் திருநெல்வேலி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருநெல்வேலி போலீசார் கடலூர் சென்று பாஜக நிர்வாகி ஜெய்குமாரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்குமார் விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story