கும்மிடிப்பூண்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கும்மிடிப்பூண்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கும்மிடிப்பூண்டியில் தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்தும், கோவை மாவட்ட தலைவர் கைது செய்யபட்டதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் தியாகராஜன், சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சர்பூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகீம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story