"திமுகவை மிரட்டி பார்க்கலாம் என பாஜக நினைக்கிறது" கனிமொழி எம்.பி. கருத்து
தன்னை எதிர்ப்பவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய மூன்றையும் பாஜக பயன்படுத்துவதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று இருக்கக்கூடிய பாஜக ஒன்றிய அரசாங்கம், தன்னை எதிர்ப்பவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறது.
இதை வைத்து திராவிட முன்னேற்ற கழகத்தையும் மிரட்டி பார்க்கலாம் என பாஜக நினைக்கிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 மாநில தேர்தல் முடிவுகள் 'இந்தியா' கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்" என்றார்.
Related Tags :
Next Story